இதில் உங்க பெயரின் முதல் எழுத்து எது? யார் அதி சக்தி வாய்ந்தவர்கள்? அவசியம் படியுங்கள்..!

ஒரு மனிதனுடைய அடையாளம் என்பதே அவருடைய பெயர் தான். நம்முடைய எந்த தகவலை மற்றவர்களுக்கு சொல்வதானாலும் நம்முடைய பெயர் தான் ஆதாரமாக இருக்கும். ஏன் நம்முடைய பெயர் தான் நம்முடைய அடையாளமாகவே இருக்கும். அதனால் தான் குழந்தை பிறந்ததும் அந்த குழந்தைக்கு பெயர் வைப்பதற்காக மிகவும் மெனக்கெடுகிறோம்.அதனால் தான் பெயர் வைப்பதற்கு ஜாதகம், ஜோதிடம், பிறந்த நேரம், ராசி, நட்சத்திரம் என அத்தனையும் பார்த்து, தேடித்தேடி பேர் வைக்கிறோம்.

உங்களுடைய பெயர் தான் உங்களுடைய மிக முக்கிய அடையாளமே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.பெயருக்கு ஏற்றபடி தான் குணமும் இருக்கும் என்று சொல்வார்கள். அந்த பெயரை வைத்தே ஜோதிடம், பெயர் பொருத்தம் என பார்ப்பதுண்டு. அப்படி நம்முடைய பெயரினை வைத்தே, நாம் யார், நம்முடைய குணங்கள் என்ன, நம்முடைய பழக்க வழக்கங்கள் எப்படி இருக்கும், என்பதை தெரிந்து கொள்ள முடியும். அவ்வளவு ஏன் நம்முடைய மனதுக்குள் இருக்கும் ரகசியங்கள், நாம் செய்யும் தொழில், எதிர்காலம் என அத்தனையையும் கணிக்க முடியும்.

முதல் நான்கு எழுத்து:உங்களுடைய பெயரானது A,B,C,D என்ற நான்கு எழுத்தில் ஒன்றில் உங்களுடைய பெயர் ஆரம்பித்தது என்றால், உங்களுடைய வாழ்க்கை ரகசியங்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம். இந்த எழுத்துக்களில் பெயர் இருப்பவர்கள் மிகுந்த மன உறுதியுடன் இருப்பவர்களாக இருப்பார்கள்.அதிகாரத் தோரணையும் ஒரு குழுவை வழி நடத்தும் ஆண்மையும் பெற்றிருப்பார்கள். வாழ்க்கையை ரசித்து, ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ நினைப்பவர்கள். வாழ்க்கையின் மீது பிடிப்பும் அதிக ஈடுபாடும் கொண்டவராக இருப்பீர்கள்.

உங்களில் சிலர் அதிகமாக உணர்ச்சிவசப்படக் கூடியவராக இருப்பார்கள். பல்துறை அறிவு பெற்றவராக இருப்பீர்கள். அதனாலேயே அதிக மன திடம் கொண்டவராகவும் இருப்பீர்கள். எதையும் சுத்தமாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் நீங்கள். அப்படித்தான் நீங்களும் நடந்து கொள்வீர்கள். சிக்கனம் என்றால் என்ன என்று கேள்வி கேட்பீர்கள். பணத்தை தாராளமாக செலவு செய்வீர்கள்.

5 முதல் 8 வரை:ஆங்கில எழுத்துக்களில் ஐந்தாம் எழுத்து முதல் எட்டாம் எழுத்து வரையில் உள்ள E, F, G, H ஆகிய நான்கு எழுத்துக்களையும் தொடக்கமாகக் கொண்டவர்கள் பற்றிய வாழ்க்கை ரகசியங்களையும் குணங்களையும் இப்போது பார்க்கலாம்.

மற்றவர்களிடம் மிக எளிதாகச் சென்று பழக ஆரம்பித்துவிடுவீர்கள். புதிய நபர்களிடம் பேசுவதில் தயக்கம் காட்டமாட்டீர்கள். சுயமாக சிந்திக்கும் ஆற்றல் கொண்டிருப்பீர்கள். எதையும் தானே முடிவு செய்து செய்ய ஆரம்பிப்பீர்கள். அதேபோல் அந்த வேலையில் மிகச்சிறப்பான திட்டமிடலும் இருக்கும்.

எப்போதும் முதலாளியாகவே இருக்க விரும்புவீர்கள். மறற்வர்களுக்கு கீழ் அடிமையாக இருப்பதை வெறுப்பவர்களாக இருப்பீர்கள். அதேசமயம் உங்களைச் சுற்றி உள்ளவர்களிடம் அன்பாகவும் நடந்து கொள்வீர்கள். நட்பை மதிக்கத் தெரிநதவர்களாக இருப்பீர்கள். உங்களுக்கு காதலெல்லாம் பெருசா செட் ஆகாது.
பயணங்கள் மேற்கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பீர்கள். சுய விழிப்புணர்வு அதிகம் கொண்டவராக இருப்பீர்கள்.

9 முதல் 12 வரை:ஆங்கில எழுத்துக்களில் ஐந்தாம் எழுத்து முதல் எட்டாம் எழுத்து வரையில் உள்ள I, J, K, L ஆகிய நான்கு எழுத்துக்களையும் தொடக்கமாகக் கொண்டவர்கள் பற்றிய வாழ்க்கை ரகசியங்களையும் குணங்களையும் இப்போது பார்க்கலாம்.அழகை ஆராதிக்கும் பேரழகு கெண்டவராகத் திகழ்வீர்கள். அதனாலேயே அதீத தன்னம்பிக்கையும் துணிச்சலும் நிறைந்தவராக இருப்பீர்கள். நீங்கள் செய்யும் எந்த வேலையாக இருந்தாலும் அதில் ஒரு கலைநயம் இருக்கும்.

நீங்கள் நினைத்ததை அடையும் வரை போராடிக் கொண்டே இருக்கும் குணம் கொண்டவராக இருப்பீர்கள்.எதையுமே மிகவும் வெளிப்படையாக அணுக மாட்டீர்கள். சூழலுக்குத் தகுந்தபடி மாறிக்கொள்ளும் நபராக இருப்பீர்கள். எதற்கான என்ன வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்று தெரியாமலே வேலை செய்துவிட்டு, எப்படியாவது குறுக்கு வழியிலாவது வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குப் போய்விட வேண்டும் என்று நினைப்பீர்கள்.உங்களிடம் ஆழமான அன்பையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. குடும்பத்தில் உள்ளவர்கள் நீங்கள் என்ன செய்தாலும் அதற்கு பக்கபலமாக இருப்பார்கள்.

13 முதல் 16 வரை:ஆங்கில எழுத்துக்களில் ஐந்தாம் எழுத்து முதல் எட்டாம் எழுத்து வரையில் உள்ள M, N, O, P ஆகிய நான்கு எழுத்துக்களையும் தொடக்கமாகக் கொண்டவர்கள் பற்றிய வாழ்க்கை ரகசியங்களையும் குணங்களையும் இப்போது பார்க்கலாம்.

அசாத்திய தைரியம், நிறைந்த அறிவாற்றல், பெருத்த கோபம், கடின உழைப்பு ஆகியவற்றுக்குச் சொந்தக்காரர்களாக இருப்பார்கள். எதையும் ஒனளிவு மறைவு இல்லாமல் பட்டென போட்டு உடைத்துவிடும் குணம் கொண்டவர்கள். தனக்கு எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அதைக்கடந்து, மற்றவர்களுடைய வாழ்க்கைக்கான சிறந்த ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கூறுவீர்கள்.திருமண வாழ்க்கையில் உங்களுக்கு நம்பத் தகுந்த துணை கிடைக்கும். உங்களுடைய அசராத கடின உழைப்பும், விடா முயற்சியும் பார்த்து, சோம்பேறிகள் உங்களை நெருங்கவே அஞ்சுவார்கள்.

எல்லாவற்றிலும் திருப்தி வேண்டும் என்பதால், வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வதில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். கல்வியையும் அறிவையும் தன்னுடைய இரு கண்களாக நினைப்பீர்கள். அதனாலேயே தான் பழகும் அனைவரும் தன்னைப் போலவே இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். இல்லையென்றால் அவர்களைப் புறக்கணித்து விடுவீர்கள். எதையும் மனதுக்குள் வைக்காமல் படபடவென பேசிவிடுவீர்கள். அதேபோல் எப்போதும் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள ஆசைப்படுவீர்கள்.

17 முதல் 20 வரை:ஆங்கில எழுத்துக்களில் ஐந்தாம் எழுத்து முதல் எட்டாம் எழுத்து வரையில் உள்ள Q, R, S, T ஆகிய நான்கு எழுத்துக்களையும் தொடக்கமாகக் கொண்டவர்கள் பற்றிய வாழ்க்கை ரகசியங்களையும் குணங்களையும் இப்போது பார்க்கலாம்.மன திடம் அதிகமாகக் கொண்டிருப்பீர்கள். எதையும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பவராக இருப்பீர்கள். எந்த காரியமாக இருந்தாலும் அதில் ஒரு புதிய முறையைக் கையாள வேண்டும் என்று நினைப்பீர்கள். எதையும் பிரஷ்ஷாக செய்ய வேண்டும் என்று அடம் பிடிப்பீர்கள்.

அடுத்தவர்களைப் போல் ஆடைகள் அணிவதை விரும்பவே மாட்டார்கள். எதையும் மிக இலகுவாகக் கையாளும் மனப் பக்குவம் கொண்டவராக இருப்பீர்கள். வாழ்க்கையில் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பதால் பதட்டத்தை வெறுப்பீர்கள்.

குறிப்பாக எஸ் என்னும் ஆங்கில எழுத்தில் பெயர் ஆரம்பிக்கும் நபராக இருந்தால் எல்லாவற்றிலும் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். எல்லாவற்றையும் புதிதாக யோசித்து, மற்றவர்களைக் கவரும்படி செய்வார்கள். காதலில் மிகப்பெரிய கில்லாடியாக இருப்பார்கள். மிக எளிதாக மற்றவர்களைக் கவர்ந்து விடுவார்கள்.

21 முதல் 24:ஆங்கில எழுத்துக்களில் ஐந்தாம் எழுத்து முதல் எட்டாம் எழுத்து வரையில் உள்ள U, V, W, X ஆகிய நான்கு எழுத்துக்களையும் தொடக்கமாகக் கொண்டவர்கள் பற்றிய வாழ்க்கை ரகசியங்களையும் குணங்களையும் இப்போது பார்க்கலாம்.எதிலும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவராக இருப்பார்கள். எந்த வேலையாக இருந்தாலும் அதை நேர்த்தியாக செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். நினைப்பதையே செய்தும் முடிப்பார்கள்.

மிகவும் மென்மையான குணம் கொண்டிருப்பார்கள். அதேசமயம் உறுதியான மன ஆற்றல் உடையவராகவும் இருப்பார்கள். தான் விரும்பும் நபர் மற்றவர்களிடம் அதிகமாகப் புசுவதை விரும்ப மாட்டார்கள். அது நட்பு, காதல் எதுவானாக இருந்தாலும் அப்படித்தான். எல்லோருக்கும் வாரிக் கொடுக்கும் வள்ளல். இவர்களிடம் நீங்கள் எப்பேர்ப்பட்ட ரகசியத்தையும் சொல்லலாம். அது இவர்களைத் தாண்டி, வெளியே செல்லாது.

25 மற்றும் 26:ஆங்கில எழுத்துக்களில் ஐந்தாம் எழுத்து முதல் எட்டாம் எழுத்து வரையில் உள்ள Y. Z ஆகிய இரண்டு எழுத்துக்களையும் தொடக்கமாகக் கொண்டவர்கள் பற்றிய வாழ்க்கை ரகசியங்களையும் குணங்களையும் இப்போது பார்க்கலாம்.எந்த வேலையும் செய்ய மாட்டார்கள். ஆனால் சொகுசு வாழ்ககை வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருப்பதால், நட்பு வட்டாரம் மிகக் குறுகியதாகவே இருக்கும்.

எதிலும் கொஞ்சம் கூடுதல் துணிச்சல் உடையவர்களாகக் காட்டிக் கொள்வார்கள். அதிக கோபம் வரும். எவ்வளவு முரட்டு குணம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளத் தயங்குவார்கள்.இப்படி நம்முடைய ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு கதையும் ரகசியமும் வரலாறும் உண்டு.