யாழில் இன்று நடந்த கொரோனா பரிசோதனை…மேலும் இருவருக்கு தொற்று உறுதி..!!

யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தகவலை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் 69 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட போதே குறித்த இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். வவுனியா தனிமைப்படுத்தல் மையங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளவர்களில் இன்று 12 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்களில் இருவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அந்தவகையில் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களது விபரங்கள் பின்வருமாறு ,தனிமைப்படுத்தல் மையம் பம்பைமடு (BTS) – 10 பேர் (ஒருவருக்கு தொற்று உறுதி), தனிமைப்படுத்தல் மையம் பம்பைமடு – இருவர் (ஒருவருக்கு தொற்று உறுதி),பொது வைத்தியசாலை மன்னார் – 7 பேர்,இலங்கை விமானப்படை தனிமைப்படுத்தல் மையம் வவுனியா – 20 பேர்,கடற்படை வைத்தியசாலை காங்கேசன்துறை – 10 பேர்,யாழ் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவு (வேலனை) – 20 பேர்