வான்வெளியில் திடீரெனக் காணாமல் போன நட்சத்திரம்.!! பெரும் அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்.!!

வானியல் ஆய்வாளர்களினால் தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு வந்த இராட்சத நட்சத்திரமொன்று திடீரென காணாமல்போயுள்ளதாக தெரியவருகிறது.இந்த நிலையில், குறித்த தொலைதூர நட்சத்திரம் ஒரு சுப்பர் நோவாவாக வெடிக்காமல் கருந்துளை ஒன்றுக்குள் விழுந்துள்ளதா என்பது தொடர்பில் வானியலாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர்.அவ்வாறு நடந்திருந்தால் பெரிய நட்சத்திரம் ஒன்று இந்த வகையில் வாழ்வை முடித்துக்கொண்ட முதல் உதாரணமாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.எனினும், இதற்கு வேறு சாத்தியங்களும் இருக்கக் கூடும் என்று இந்த ஆய்வு பற்றிய விபரத்தை வெளியிட்டிருக்கும் வானியல் சஞ்சிகை ஒன்று குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த நட்சத்திரம் கின்மான் பால்மண்டலத்தில் சுமார் 75 மில்லியன் ஒளியாண்டுத் தொலைவில் உள்ளது. இது எமது சூரியனை விடவும் சுமார் 2.5 மில்லியன் மடங்கு ஒளிரக் கூடியது.2001 தொடக்கம் 2011 வரை இந்த நட்சத்திரம் பற்றி பல வானியலாளர் குழுக்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன.என்ற போதும் 2019இல் இது பற்றி ஆய்வு மேற்கொள்ள அயர்லாந்தின் டப்லின் டிரினிட்டி கல்லூரி முயன்றபோது இந்த நட்சத்திரம் காணாமல்போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.