யாழ்.கச்சேரி- நல்லூர் வீதியில் கோர விபத்து.!! உந்துருளியில் வந்த பெண்களை பந்தாடிய கார்.!! தாயும், மகளும் படுகாயம்..!

யாழ்.கச்சோி- நல்லுார் வீதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் தாயும் பிள்ளையும் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிட்டுப் பூங்கவில் இருந்து கச்சேரி நோக்கி வந்த வங்கி முகாமையாளர் ஒருவரின் கார் நாவலர் வீதியும் கச்சேரி நல்லூர் வீதியும் சந்திக்கும் வீதியை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.இதன் போது மோட்டார் சைக்கிலில் வந்த தாயும் பிள்ளையும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். மோதிய கார் வீதியோரமாக உள்ள தொலைத் தொடர்பு கம்பத்துடன் மோதியுள்ளது.இவ்விபத்தில் மோட்டார் சைக்கில் வந்த தாயும் பிள்ளையும் காயமடைந்த நிலையில் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.