உங்கள் இரகசியத்தைச் சொல்லும் காதல் இலக்கத்தைப் பற்றித் தெரியுமா உங்களுக்கு..?

உங்களின் பிறந்த வருடம், மாதம் மற்றும் தேதி ஆகியவற்றின் கூட்டுத்தொகையே காதல் எண். உதாரணமாக 04-02-1989. இதில் 04+02+1989=33= 6. இது தான் காதல் எண்.
காதல் எண் 1: பெண்ணுக்குரிய குணம்:வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று அதிக ஆர்வமுள்ளவர்கள். தனக்கு வரும் கணவன் தன்னைவிட எல்லா அம்சங்களிலும் உயர்ந்து நிற்க வேண்டும் என்று ஆசைப்படும் குணம் கொண்டவர்கள். உங்களுக்கு லட்சியமும், நகைச்சுவை குணமும் அதிகளவில் இருக்கும்

காதல் எண் 1: ஆணுக்குரிய குணம்:மனையிடத்தில் விசுவாசத்தோடும், பெருந்தனையோடும், நன்றியுணர்ச்சியோடும் இருப்பீர்கள்.மனைவியிடத்தில் விசுவாசத்தோடும், பெருந்தன்மையோடும், நன்றியுணர்ச்சியோடும் இருப்பீர்கள். மனைவியின் செயல்களில் குறைக் கண்டுபிடிப்பதைத் தவிர்த்து விடுங்கள். அதுவே, உங்கள் வாழ்க்கையை சொர்க்கம் போல் மாற்றிவிடும்.

காதல் எண் 2: பெண்ணுக்குரிய குணம்:கணவர் எள் என்றால் எண்ணையாய் நிற்கும் குணம் கொண்டவர். அடிக்கடி கோபம் அடையக்கூடியவர். நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையையும் அல்லது நீங்கள் உடுத்தும் உடையையும், அலங்காரத்தையும் உங்கள் கணவர் அல்லது காதலர் பாராட்ட வேண்டும் என்று நினைப்பவர்.
காதல் எண் 3: ஆணுக்குரிய குணம்:நீங்கள் ஒரு காதல் மன்னன். எப்பொழுதும் உங்கள் காதலியின் அனுதாபத்தை கேட்டு அதற்கு தீர்வு காண தவறமாட்டீர்கள்.

காதல் எண் 3: பெண்ணுக்குரிய குணம்:உங்களுக்கு அழகு கூட 2ம் பட்சம் தான். ஆனால், ஆண்மை நிறைந்தவரையே அதிகம் எதிர்பார்ப்பீர்கள். உங்களுக்கு எதிலும் பயம் என்பது கிடையவே கிடையாது.
காதல் எண் 3: ஆணுக்குரிய குணம்:தர்ம வல்லல் என்று போற்றப்படும் நீங்கள் அனைவருக்கும் உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்குவர். எல்லாவற்றையும் ஜாலியாக எடுத்துக்கொள்ளும் குணம் கொண்டவர்.

காதல் எண் 4: பெண்ணுக்குரிய குணம்:உங்களை நேசிப்பவரிடம் எப்போதும் விசுவாசமாகவும், நன்றியுள்ளவராகவும் இருப்பீர்கள். நீங்கள் இருக்குமிடத்தில் எப்போதும் கும்மாளமும் வேடிக்கையும் சிரிப்பும் தான் இருக்கும்.காதல் எண் 4: ஆணுக்குரிய குணம்:எப்போதும் குழந்தைகளையும், மனைவியையும் அதிகமாக நேசிப்பவர். உங்களை நேசிப்பவருக்கு உயிரைக்கூட தியாகம் செய்யத் தயங்காதவர். உங்களை கணவராக அடைபவர் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

காதல் எண் 5: பெண்ணுக்குரிய குணம்:எப்போதும் பேராசை குணம் கொண்டவர். இந்த உலகத்தை ஒரு முறையாவது சுற்றி வர வேண்டும் என்று ஆசை கொண்டவர். பெண்மை பரி பூரணமாக குட்கொண்டிருக்கும்.
காதல் எண் 5: ஆணுக்குரிய குணம்:உங்களது பார்வைக்காக ஏங்காத பெண்களே இருக்க முடியாது. உங்களின் போக்கு மற்றவர்களுக்கு அதிர்ச்சியையும், ஆனந்தத்தையும் அளிக்கலாம். உங்களுக்கு காதல் வாழ்க்கை ஒரு சவால் தான்!

காதல் எண் 6: பெண்ணுக்குரிய குணம்:என் கணவர், என் குழந்தைகள் தான் உலகம் என்று வாழக்கூடியவர். குப்பை மேட்டைக்கூட கோவிலாக்கும் கலை நயம் படைத்தவர்.
காதல் எண் 6: ஆணுக்குரிய குணம்:அழகை ஆராதனை செய்யும் சமயத்தில் கவிதைகளையும் எழுதித் தள்ளுவீர்கள். காதல் பவித்திரமானது என எண்ணும் குணம் கொண்டவர். பெண்ணை மலரெனக் கையாளும் பாங்குடையவர்.காதல் எண் 7: பெண்ணுக்குரிய குணம்:உங்களை பார்க்கும் போது நீங்கள் அகம்பாவம் பிடித்தவர் போல் இருப்பீர்கள். ஆனால், பழகப் பழகத்தான் நீங்கள் இனியவர் என்று உணர்வார்கள். இஷ்டப்பட்டதை அடையத் தவறமாட்டீர்கள். அதிகாரமும், பணமும் உள்ளவரைத் தான் நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.காதல் எண் 7: ஆணுக்குரிய குணம்:எப்போது பார்த்தாலும் புத்தகத்தோடு தான் இருப்பீர்கள். அதோடு காரணகாரியத்தில் ஆராய்ச்சியில் மூழ்கி விடுவீர்கள். கற்பனையிலேயே இருந்து கொண்டிருப்பீர்கள்.
காதல் எண் 8: பெண்ணுக்குரிய குணம்:நீங்கள் ஒரு அபூர்வப் பிறவி. எல்லாவற்றையும் ஏனோ தானோ என்று தான் செய்வீர்கள். பணம், பதவி எல்லாம் உங்களுக்கு அனாவசியம் தான்.காதல் எண் 8: ஆணுக்குரிய குணம்உங்களுக்கு இடையூறாக இருப்பது உங்களின் பொறாமைக் குணம் தான். சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் உயர்ந்து நிற்கும் குணம் கொண்டவர். அடுக்கடுக்காக வெற்றிகளையும், தோல்விகளையும் சந்தித்தாலும், மனம் தளராமல் லட்சியவாதியாகச் செயல்பட்டு வெற்றியின் சிகரத்தை எட்டிப்பிடிப்பீர்கள்.
காதல் எண் 9: பெண்ணுக்குரிய குணம்:உங்களின் அன்பும், காதலும் காரணமாக உங்களோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை தான் உங்களது கணவருக்கு சொர்க்க வாழ்கை என்று கூறுவார்.
காதல் எண் 9: ஆணுக்குரிய குணம்:எந்த வேலையாக இருந்தாலும் சுறுசுறுப்பாக எளிதில் செய்து முடித்துவிடுவீர்கள். அரசியலில் நுழைந்தால் மக்களின் ஆதரவு எப்போதும் உங்களுத்தான்.