இதை இப்படிச் செய்தால் வாய்த் துர்நாற்றத்தை அடித்து விரட்டி விடலாமாம்..!

வயிற்றுக் கோளாறு உள்ளவர்களுக்கு நிச்சயம் வாய் துர்நாற்றம் ஏற்படும். அதாவது அல்சர் நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள்.இதனை வாய் துர்நாற்றத்தை ஹளிடோசிஸ் என்று சொல்வார்கள்.


பொதுவாக இதுபோன்ற பிரச்சினை வரக்காரணம் சரியாகப் பல் துலக்காமல் இருப்பது, உணவு சாப்பிட்டதும் ஒழுங்காக வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவை வாய் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.பற்களின் இடையில் அல்லது நாவின் பின்புறம் உருவாகும் கிருமிகளே பெரும்பாலும் வாய் துர்நாற்றத்திற்கான முக்கிய காரணிகளாகும்.

வாய் துர்நாற்றம் உள்ள மனிதர்களை நாம் பலமுறை கடந்து வந்திருக்கலாம். அல்லது ஒரு வேளை நீங்களே கூட வாய் துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களை பலரும் ஒதுக்கி இருக்கலாம். இந்த சூழ்நிலை நிச்சயமாக ஒரு வித சங்கடத்தை நிச்சயம் உண்டாக்கும்.

காரணங்கள்:வாய் துர்நாற்றத்தை ஹளிடோசிஸ் என்று சொல்வார்கள். இது ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. நாம் உண்ணும் உணவைப் பொறுத்து வாய் துர்நாற்றம் உண்டாகலாம். அல்லது மருந்து பயன்பாடு , ஈறு பிரச்சனை, புகை பிடித்தல் அல்லது வறண்ட வாய் அல்லது உதடு போன்றவையும் வாய் துர்நாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம்.இனி கவலையே வேண்டாம். வாய் துர்நாற்றத்தைப் போக்க வைத்தியங்கள் உண்டு. இயற்கை முறையில் வாய்துர்நாற்றத்தை விரட்டி அடித்துவிடலாம்.