வரப் போகும் வக்ர பெயர்ச்சியால் மகரத்திலிருந்து தனுசுக்கு செல்லும் குரு..! அதிர்ஷ்டத்தைப் பெறப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்..!!

நவ கிரகங்களில் குரு பகவான் ஒரு சுப கிரகம். பொதுவாக கிரகங்கள் அனைத்துமே தங்கள் சுற்றுப் பாதையில் முன்னோக்கி சுற்றிக் கொண்டிருக்கும். அப்படி செல்லும் போது, அவற்றில் செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி போன்ற கிரகங்கள் மட்டும் பின்னோக்கியும் செல்லும் தன்மை கொண்டவை. அப்படி பின்னோக்கி செல்வதை தான் வக்ர பெயர்ச்சி என்று கூறுவார்கள்.

கடந்த மார்ச் மாதம் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சென்ற குருபகவான் மெதுவாக மீண்டும் தனுசு ராசிக்கு ஜூன் 30 அன்று இடம் பெயர்கிறார். தனுசு ராசியில் இருக்கும் குருபகவான் செப்டம்பர் 13 வரை வக்ர நிலையில் இருந்து, மீண்டும் நேர்கதிக்கு மாறும் குருபகவான் நவம்பர் 20 ஆம் தேதி வரை தனுசு ராசியிலேயே இருந்து, மீண்டும் மகர ராசிக்கு செல்லவிருக்கிறார்.

தற்போதைய சூழ்நிலையில் குருபகவானின் இந்த வக்ர பெயர்ச்சியால் யாருக்கு நன்மை விளையப் போகிறது, யார் கஷ்டங்களை அனுபவிக்கப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

மேஷ ராசிக்காரர்களே! இந்த குரு வக்ர பெயர்ச்சியால் உங்களுக்கு உற்சாகம் பிறக்கும். சுப நிகழ்ச்சியால் வீட்டில் சந்தோஷம் பொங்கும். புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. பண கஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.

ரிஷப ராசிக்காரர்களே! இதுநாள் வரை தடைபட்டு வந்த சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். தம்பதியருக்குள் இருந்த பிரச்சனைகள் அகலும். சில தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுன ராசிக்காரர்களே! இனி நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தடை அல்லது தாமதம் ஏற்படும். திடீர் பண வரவு வந்தாலும், செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். வெளியூர் பிரயாணங்களை தள்ளிப் போடுங்கள். கணவன் மனைவி இடையே சின்ன சின்ன பிரச்சனைகள் வரும்.

கடக ராசிக்காரர்களே! இதுவரை தடைப்பட்டு வந்த காரியங்கள் தடையின்றி நடைபெறும். குரு வக்ர பெயர்ச்சியால் நீங்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். சிலருக்கு தேவையில்லாத அலைச்சல்கள் வரலாம். ஆரோக்கியத்தில் கவனமாக இல்லாவிட்டால், பெரிய செலவை சந்திக்க வேண்டியிருக்கும்.

சிம்ம ராசிக்காரர்களே! குரு வக்ர பெயர்ச்சியால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். தடைபட்டு வந்த நல்ல காரியங்கள் இனி நடைபெறும். உறவினர்களுடன் சந்தோஷமாக இருப்பீர்கள். பெரிய ஆட்களின் நட்பை பெறுவீர்கள்.

கன்னி ராசிக்காரர்களே! உங்கள் வாயை அடக்கி வைத்திருப்பது நல்லது. தடைப்பட்ட திருமணம் நடைபெறும் வாய்ப்பு கிடைக்கும். தம்பதியர் வீண் சண்டைகளைத் தவிர்த்து, விட்டுக் கொடுத்து போவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம் ராசிக்காரர்களே! உங்களுக்கு ஜூலை 31 முதல் செப்டம்பர் 10 வரை அற்புதமான காலம். இருப்பினும் ஜூலை 31 வரை சற்று கவனமாக இருங்கள். உங்கள் வருமானம் அதிகரிக்கும். எண்ணங்கள் நிறைவேறும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிக ராசிக்காரர்களே! உங்களுக்கு புதிய வேலை கிடைக்கக்கூடும். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகம் இருந்தாலும், வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் பெற்றோருடன் வாக்குவாதம் செய்யாதீர்கள். மனைவி வழி சொத்துக்கள் உங்களைத் தேடி வரும்.

தனுசு ராசிக்காரர்களே! இதுவரை குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 10 வரையிலான காலத்தில் தம்பதியரிடையே சண்டைகள் அதிகம் வரும். எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும்.

மகர ராசிக்காரர்களே! புதியவர்களுடன் பழகும் போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். வேலையில் கவனமாக இருங்கள். எடுக்கும் காரியங்களை முடிக்க முடியாமல் சிரமப்படலாம். கடன் பிரச்சனைகள் உங்களுக்கு தொல்லை தரலாம். கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் வரலாம். எனவே கவனமாக இருங்கள்.

கும்ப ராசிக்காரர்களே! லாபத்தை குரு அள்ளித் தரப் போகிறார். இருந்தாலும் பண நெருக்கடி வந்து போகும். நீங்கள் எடுக்கும் எந்த ஒரு புதிய முயற்சிக்கும் வெற்றி கிடைக்கும். உங்களுக்கு ஒருவேளை வீடு கட்டும் எண்ணம் இருந்தால், அது இக்காலத்தில் நிறைவேறும்.

மீன ராசிக்காரர்களே! உங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நீங்கள் தொலைத்த பணம், நகை கிடைக்கும். இதுவரை தடைப்பட்டு வந்த காரியங்கள் நிறைவேறும். தம்பதியர்களின் வாழ்க்கை ரொமான்டிக்காக இருக்கும்.