ஆட்டிப்படைக்கும் ஏழரைச் சனி…!! ஜென்ம குருவை அடித்து தூக்கி தனுசுக்கு அள்ளி கொடுக்கும் ராகு கேது பெயர்ச்சி!! திடீர் குபேரவரம் யாருக்கு?

ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அந்த கிரகங்களின் பலனை செய்வார்கள்.

ரிஷபம் சுக்கிரன் வீடு என்பதால் ராகு சுக்கிரனை போலவும், விருச்சிகம் செவ்வாய் வீடு என்பதால் கேது செவ்வாயை போலவும் செப்டம்பர் மாதம் முதல் பலனை கொடுப்பார்கள்.இந்த கொரோனா கால கட்டத்தில் எல்லோருமே கஷ்டத்தில்தான் இருக்கிறார்கள். நிகழப்போகும் ராகு கேது பெயர்ச்சியால் கொரோனா வைரஸ் தாக்கம் குறையும் என்பதே பலரின் கணிப்பு. அதிக கஷ்டத்தில் உள்ள மிதுனம், தனுசு ராசிக்காரர்களின் சிக்கல்கள் தீரும் காலம் வந்து விட்டது.

ஆவணி மாதம் 16ஆம் தேதி செப்டம்பர் 1ஆம் தேதி வாக்கியப்பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி நடைபெறப்போகிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி செப்டம்பர் 23ஆம் தேதி நிகழ்கிறது. இந்த இடப்பெயர்ச்சியால் தற்போது மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிஷபம் ராசிக்கு நகர்கிறார்.அதே போல கேது பகவான் தற்போது உள்ள தனுசு ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு நகர்கிறார்.

ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6,11,ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3,7,11, பார்வைகள் விசேசமானது. ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

அள்ளித்தரும் ராகு கேது:பாவ கிரகங்கள் ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நன்மை ஏற்படும். ராகு எண்ணம், ஆசை மோகம் முயற்சியும் அதற்குத் தேவையான பயிற்சியும் கொடுப்பார். கேது ஞான காரகன், அவரும் சரியான இடத்தில் இருந்தால் அள்ளித்தரும் வள்ளல், திடீர் குபேரன். ஆக உருவாக்குவார்.

மிதுனம்:செப்டம்பர் மாதம் முதல் விரைய ஸ்தானத்தில் ராகுவும் ஆறாம் வீட்டில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். ராகு ஜென்ம ராசியில் இருந்தாலும் தனுசு ராசியில் இருந்த சனியின் பார்வை உங்க ராசியில் இருந்த ராகுவை செயல்பட விடாமல் தடுத்தது.ஒருவழியாக குருவின் பார்வை கிடைத்து செயல்பட தொடங்கியிருக்கிறார் ராகு என்றாலும் அஷ்டமத்து சனி ஆட்டித்தான் வைக்கிறது. இனி உங்கள் வாழ்க்கையில் இருந்த இருள் விலகி வெளிச்சம் கிடைக்கப் போகிறது. ராகு 12 ஆம் இடத்திற்கு மாறுவதால் தொழில் வாய்ப்பு நன்றாக இருக்கும். புதிய வர்த்தக தொடர்பு ஏற்படும். சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும்.சுபகாரியங்கள் திருமணம், வீடு கிரக பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.

ஏழாம் வீட்டில் இருந்த கேதுவினால் குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகம் இருந்தது. இனி கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். ஆறாம் இட கேதுவினால் நன்மைகள் அதிகம் நடைபெறும். பண விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணத்தை யோசித்து முதலீடு செய்யுங்கள். பத்திரமான இடத்தில் பணத்தை சேமிப்பது நன்மை தரும்.

தனுசு:மனதில் மகிழ்ச்சி தரும் ராகு தனுசு ராசிக்கு களத்திர ஸ்தானத்தில் இருந்து ராகு இடப்பெயர்ச்சியாகி ஆறாம் வீட்டிற்கு நகர்கிறார். கேது தலையில் இருந்து விலகி 12ஆம் வீட்டிற்கு நகர்கிறார். ஏழரை சனி, ஜென்ம குரு இருந்தாலும் ராகு கேது பெயர்ச்சி நன்மையை தரப்போகிறது.

ராகுவினால் தனுசு ராசிக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கப் போகிறது. உப ஜெய இடமான 6வது வீட்டிற்கு வருகிறார். வெற்றிகள் கிடைக்கும். இகழ்ந்தவர்களுக்கு மத்தியில் வெற்றி பெறுவீர்கள். நல்ல விசயங்கள் கிடைக்கும். வீடு வாகன சேர்க்கை கிடைக்கும். உறவுகளுக்கு இடையே மகிழ்ச்சி தாண்டவமாடும்.தனுசு ராசிக்கு ஜென்மத்தில் இருந்த கேது விரைய ஸ்தானத்திற்கு மாறுவதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். கொரோனா பிரச்சினையில் வேலை போய்விட்டதே என்று கவலைப்பட்டவர்களுக்கு இனி நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு உத்யோகத்தில் பதவி உயர்வும் கூடி வரும்.