தொண்டை கரகரப்பு நோய்த்தொற்றை விரட்டியடிக்கும் அற்புதமான பானம்..!! நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்..!

பொதுவாக நமது உடல் நலத்தைப் பாதுகாக்க, தீய பழக்கங்களைப் பின்பற்றாமல் இருப்பது மிகவும் முக்கியம். நமது குரல் நமது அடையாளம். அதனைப் பாதுகாப்பது என்பது நமது கடமை. குறிப்பாக பாடகர்கள், பேச்சாளர்கள் மற்றும் நாள் முழுவதும் பேசும் தொழிலைச் செய்பவர்கள் தங்கள் குரல் மற்றும் தொண்டை மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.

பெரும்பாலும் தொண்டை கரகரப்பு ஏற்பட காரணமாய் இருப்பது புகைப்பிடிக்கும் பழக்கம் அல்லது புகை சார்ந்த இடங்களில் வேலை பார்ப்பது, அதிக சத்தமாய் கத்திப் பேசுவது போன்றவையாக தான் இருக்கும். மேலும் தொண்டை கரகரப்புக்கு அழற்சிகளும் காரணமாக இருக்கும். தொண்டை கரகரப்பு ஏற்படும் போது சில சமயங்களில் சிலருக்கு நெஞ்செரிச்சலும் சேர்ந்து ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

தொண்டை கரகப்பு என்பது அனைவருக்கும் ஏற்படும் ஒரு சாதாரணப் பிரச்சனை தான். இது ஒரு வாரம் நீடிப்பதே அதிகம். அதற்குள் சரியாகி விடும். ஒரு வேலை உங்களுக்கு தொண்டை கரகரப்பு நெடுநாட்கள் நீடித்து வந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசிக்கவும். ஏனெனில், தொண்டை கரகரப்புப் புற்றுநோய்க்கான ஒரு அறிகுறி என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

நாம் முன்பு சொன்னது போல தொண்டை கரகரப்பைப் பல சமயங்களில் நாமே நமக்கு பரிசளித்துக் கொள்ளும் பிரச்சனையாக தான் வருகிறது, சத்தமாக கத்தி பேசுதல், புகைத்தல் போன்றவையின் மூலம். சரி, தொண்டை கரகரப்பு வராமல் தடுப்பது எப்படி என்பதனைத் தெரிந்துக் கொள்ள வேண்டுமா?கீழே உள்ள வீடியோவில் அதற்கான அருமையான தீர்வு உள்ளது