கிளிநொச்சிப் பாடசாலைகளில் சிவில் பாதுகாப்பு பிரிவு சுத்தம் செய்யும் நடவடிக்கை.!!

பாடசாலைகள் தற்போது மீளவும் ஆரம்பித்துள்ள நிலையில் பாடசாலைகளை சுத்தம் செய்யும் பணிகளில் கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

பாடசாலைகளில் சிரமதானப் பணிகளில் ஈடுப்படுவதோடு. தொற்று நீக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தங்களது பணிகளை ஆரம்பித்துள்ள சிவில் பாதுகாப்பு பிரிவினர் தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு கிளிநொச்சியின் ஏனைய பாடசாலைகளிலும் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.அத்தோடு பாடசாலைகளை சுத்தம் செய்வதற்கும் தொற்று நீக்குவதற்கும் தங்களது பணிகள் தேவைப்படும் பாடசாலைகள் கிளிநொச்சி சிவில்பாதுகாப்பு திணைக்களத்துடன் தொடர்பு கொண்டால் தங்களது பணிகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் சிவில் பாதுகாப்பு திணைக்கத்தின் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.