பாதுகாப்பற்ற ரயில் கடவையில் கோர விபத்து.!! பரிதாபமாகப் பலியான முச்சக்கர வண்டிச் சாரதி.!!

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தொடருந்துடன் முச்சக்கரவண்டி மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

குறித்த விபத்து செட்டிகுளம் துடரிக்குளம் பாதுகாப்பற்ற புகையிரத கடவைப் பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் செட்டிகுளம் முதலியார் குளப் பகுதியை சேர்ந்த சகீது என அழைக்கப்படும் மௌலவி ஒருவரே பலியாகியுள்ளார்.குறித்த விபத்து தொடர்பில் மேலும் ;குறித்த மௌலவி தனது முச்சக்கர வண்டியில் செட்டிகுளம் பகுதியில் இருந்து துடரிக்குளம் நோக்கி சென்றுகொண்டிருந்த போது துடரிக்குளம் பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவைப்பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.