கொரோனா தொற்றினால் சிக்கித் தவித்த 149 பேர் மலேசியாவிலிருந்து இன்று இலங்கைக்கு..!!

கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இன்றையதினம் மலேசியாவில் சிக்கியிருந்த 149 இலங்கையர்கள் இன்று (30) நாடு திரும்பியுள்ளனர்.ஶ்ரீலங்கன் விமான சேவையின் விசேட விமானத்தின் மூலம் குறித்த 149 பேரும் இன்று காலை 8.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்வாறு வருகைதந்த அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.