வெறும் ஐந்து நிமிடங்களில் முகத்தில் உள்ள மருக்களை அழிப்பது எப்படி? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்…!!

முகத்தில் உள்ள மருக்கள் நம் அழகையே கெடுத்துவிடும். சிலருக்கு காதுகளுக்கு அருகில் மருக்கள் இருக்கும், சிலருக்கு முகத்திலும், உடலிலும் இருக்கும். ஜீன்கள் காரணமாக கூட நமக்கு இவை உடலில் வர வாய்ப்புள்ளது. ஆனால் இயற்கையாவே சில மனிதர்களுக்கு முகத்தில் மருக்கள் வர வாய்ப்புள்ளது. இனி அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். மரு பிரச்சனையை எளிதாக வீட்டிலிருந்தே மறைய வைக்க சில சிம்பிளான வழிமுறைகள் உங்களுக்காக இதில் கொடுக்கப்பட்டுள்ளது.


வழிமுறை 1 :தேவையான பொருட்கள்:வெங்காயம் , பூண்டு , இஞ்சி , மஞ்சள்.செய்முறை :பெரிய வெங்காயம் கால் பகுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்பு பூண்டை தோல் உரித்து சுத்தம்செய்யவும். இஞ்சியையை தோல் உரித்து பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பூண்டு மற்றும் இஞ்சி தேவையான அளவு எடுத்து அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த பின்பு இதனுடன் மஞ்சளை சேர்த்து நன்கு கெட்டியாக குழைத்துக் கொள்ளுங்கள். இதை இரவில் தூங்கும் முன்பு உங்கள் முகத்தில் பருக்கள் உள்ள இடத்தில் வைத்து விட்டு தூங்கலாம். பின்பு காலையில் முகத்தை அலசிக் கொள்ளுங்கள். இதே போல் தினமும் தொடர்ந்து 20 நாட்கள் செய்து வந்தால் மருக்கள் வாடி உதிர்ந்து விடும். சிலர் சருமத்திற்கு இது ஒத்துவராமல் இருக்கலாம். அவர்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

வழிமுறை 2 :விளக்கெண்ணெய் ,பேக்கிங் சோடா.நாம் தினமும் பயன்படுத்தும் விளக்கெண்ணெய் 1/2 ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் 1ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு குழைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை உங்கள் கருப்பு நிற மருக்கள் மீது தடவலாம்.இதை தினமும் மூன்று முறை மருக்களின் மேல் தடவி வந்தால் 15 முதல் 20 நாட்களுக்குள் மருக்கள் உதிர வாய்ப்புள்ளது.
வழிமுறை 3:
எலுமிச்சை:நன்கு பழுத்த, மணமுள்ள எலுமிச்சை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.அதை இரண்டாக நறுக்கி அரைப்பழத்தை உங்கள் முகத்தில் மருக்கள் இருக்கும் இடங்களில் தடவி வாருங்கள். இதை தினமும் மூன்று முறை வரை செய்யலாம். தொடர்ந்து செய்யும் போது ஒரு மாத காலத்தில் மருக்கள் உதிர ஆரம்பித்து விடும். எனவே இது உங்களுக்கு எளிமையாக வைத்தியமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இவற்றிற்கு நீங்கள் அதிகம் செலவிடத் தேவையில்லை. எந்த பக்க விளைவுகளும் இருக்காது. ஆனால் சிலர் சருமத்திற்கு இது ஒத்து வராததால், நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.