இந்தியாவில் கோரத் தாண்டவமாடும் கொரோனா…கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 418 பேர் பரிதாபமாகப் பலி.!!

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 418 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 ஆயிரத்து 522 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

காலை 8.00 மணி வரையான கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 522 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன், 418 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய மத்திய சுகாதார அமைச்சு சற்று முன்னர் தெரிவித்துள்ளது.இதையடுத்து இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை ஐந்து இலட்சத்து 66 ஆயிரத்து 840 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் 418 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 893 ஆக அதிகரித்துள்ளது அதிகபட்சமாக மகராஷ்ட்ராவில் ஒரு இலட்சத்து 69 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன் 7 ஆயிரத்து 610 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.அடுத்ததாக புது டெல்லியில் கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை கடந்த சில நாட்களாக திடீர் அதிகரிப்பை வெளிப்படுத்தி வருகிறது. 2 ஆயிரத்து 680 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 85 ஆயிரத்து 161 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.இவ்வாறு தமிழ்நாட்டில் 86 ஆயிரத்து 224 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.அத்துடன் உயிரிழந்தவர்களது எண்ணிக்கையும் 1141 ஆக அதிகரித்துள்ளது. குஜராத்திலும் ஆயிரத்து 827 பேர் உயிரிழந்துள்ளதுடன் 31 ஆயிரத்து 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.இதேவேளை 3 இலட்சத்து 34 ஆயிரத்து 821 பேர் குணமடைந்துள்ள நிலையில், தற்போது 2 இலட்சத்து 10 ஆயிரத்து 292 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.