கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் தடுப்பு மருந்து.!! மனிதர்களிடம் பரிசோதித்துப் பார்க்க அனுமதி..!!

இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான கோவாக்சினை (COVAXINE) மனிதர்களுக்கு வழங்கி பரிசோதிக்க இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் என்ற நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், தேசிய வைராலஜி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.

ஆய்வில் இந்த மருந்தின் பாதுகாப்புத் தன்மையும் நோய் எதிர்ப்புத் திறனும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், மனிதர்கள் மீதான பரிசோதனையை ஜூலை மாதத்தில் தொடங்கவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.இந்த நிலையில், இந்தியாவின் பயோடெக் நிறுவனமும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தில் ஆரம்பக் கட்ட வெற்றியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.