சூடு பிடிக்கும் தேர்தல் களம்.!! யாழ் கிளிநொச்சியில் நாளை முதல் சஜித் பிரேமதாஸா சூறாவளிப் பிரச்சாரம்..!!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா அடுத்த 3 நாட்கள் யாழ், கிளிநொச்சியில் முகாமிட்டு தொடர் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.

நாளை 1ஆம் திகதி சாவகச்சேரியில் மதியம் 2 மணிக்கு முதலாவது பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதைத் தொடர்ந்து, யாழ் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி, கோப்பாய் செல்வமஹால் மண்டபம், தாவடி வேலுவிநாயகர் விளையாட்டு கழகம் ஆகிய இடங்களில் பிரச்சார கூட்டங்கள் இடம்பெறும்.அதனை தொடர்ந்து, 2ஆம் திகதி- வட்டுக்கோட்டை வழக்கம்பரை அம்மன் கல்யாண மண்டபம், மானிப்பாய் பிரதேசசபை பொதுக்கூட்டம், சாவற்காடு மகாத்மா சனசமூக நிலையம், காங்கேசன்துறை இராஜேஸ்வரி மண்டபம், உடுப்பிட்டி சித்திவிநாயகர் கல்யாண மண்டபம், இராஜகிராமம்- நெல்லியடி, பருத்தித்துறை, ஊர்காவற்றுறை அனுசா கல்யாண மண்டபம் ஆகிய இடங்களில் நடக்கும் பிரச்சார கூட்டங்களில் கலந்த கொள்வார்.3ஆம் திகதி கிளிநொச்சி பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடக்கும் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்வார்.