இலங்கையில் அலுவலக நேரங்களில் மாற்றம்? மிக விரைவில் நடைமுறைக்கு..!

இலங்கையில் அலுவலக நேரங்களில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான பரிந்துரையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த பரிந்துரை அடங்கிய அறிக்கையானது இன்றைய தினம் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.இந்த விடயத்தை அலுவலக நேரங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையை அமைச்சர் மஹிந்த அமரவீர ஆராய்ந்ததன் பின், அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, ஜூலை ஐந்தாம் திகதிக்குப் பின்னர் நெகிழ்வு போக்குவரத்துத் திட்டமொன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டிலுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தற்போது மட்டுப்படுத்தப்பட்ட சேவையை முன்னெடுத்து வருகின்றன.ஜூலை ஆறாம் திகதி இரண்டாம் கட்டமாக பாடசாலை நாட்டில் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.இதனைத் தொடர்ந்து மாணவர்கள் கட்டம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளமைக்கு அமைய பாடசாலை செல்ல ஆரம்பிக்கவுள்ளனர்.இதனால், பொதுப் போக்குவரத்தில் பாரிய நெருக்கடி நிலை ஏற்படும் என்பதைக் கருத்திற்கொண்டு, இவ்வாறான நெகிழ்வு போக்குவரத்துத் திட்டத்தை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.