கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை கேட்டு அழுத்தம் கொடுக்கும் இந்தியா..!! என்ன செய்யப் போகின்றது இலங்கை அரசு..?

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பொதுத்தேர்தலின் பின்னர் உறுதியாக இந்தியாவுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருவதாக இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகவே கொழும்பு துறைமுகத்தின் ஜய கொள்கலன் முனையத்திற்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ள மூன்று புதிய கிரேன்களை அதற்கு பயன்படுத்தாமல், அவற்றை கிழக்கு முனையத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்து வருவதாக சங்கத்தின் பிரதான செயலாளர் சந்திரசிறி மஹகமகே குற்றம் சுமத்தியுள்ளார்.இதற்கு எதிராக துறைமுக பொது ஊழியர் சங்கம், வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் அந்த வழக்கு இந்த மாதம் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை தமக்கு வழங்குமாறு இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது.இந்த முனையத்தை அபிவிருத்தி செய்ய துறைமுக அதிகாரசபைக்கு 80 மில்லியன் டொலர் மாத்திரமே செலவாகும்.எனினும், தரகு பணத்திற்கு ஆசைப்பட்ட ஆட்சியாளர்களால் தேசிய வளங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.