யாழ் பழ வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ள கதி..!!

யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வெளிமாவட்ட பழ வியாபாரிகள் பழ விற்பனையில் ஈடுபட்டு வருவதால் உள்ளூர் பழ வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

மாநகர சபை எல்லைக்குள் பழ விற்பனையில் ஈடுபடுவதற்கு மாநகர சபைக்கு நாளாந்தம் 110 ரூபா செலுத்தி வருகின்றோம்.ரம்புட்டான், அன்னாசி, மங்குஸ்தான் போன்றவை குறிப்பிட்ட பருவங்களில் மாத்திரம் கிடைக்கக் கூடியவை. அவற்றை நாம் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவந்து சிறிய இலாபம் வைத்து விற்பனை செய்கிறோம்.இவற்றை வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களில் கொண்டு வந்து மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட வீதியோரங்களில் வைத்து விற்கின்றனர்.இதனால், எமது வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் மாநகர சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் உள்ளூர் பழ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.