வழமைக்குத் திரும்பும் ஐரோப்பிய நாடுகள்! இலங்கையர்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்..!!

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்ப காத்திருந்த இலங்கையர்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தாங்கள் வசிக்கும் நாடுகளில் மீண்டும் தொழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் இலங்கை திரும்பும் தீர்மானத்தை அவர்கள் கைவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் லொக்டவுன் காலப்பகுதியில் இலங்கைக்கு வருவதற்கு இலங்கையர்கள் ஆயத்தமாகிய போதும் மீண்டும் அந்தந்த நாடுகளில் லொக்டவுன் நீக்கப்பட்டு பணி இடங்கள் திறக்கப்பட்டமையினால், இலங்கையர்கள் தொழிலுக்கு செல்வதற்கு அவதானம் செலுத்தியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் முகாமையாளர் ப்ரிய ராமநாயக்க தெரிவித்துள்ளார்.இதுவரை கொரோனா பரவலினால் இலங்கைக்கு வந்த பலர், லொக்டவுன் நீக்கப்பட்ட நாடுகளுக்கு மீளவும் செல்ல முயற்சிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.