சினிமாக் காட்சிகளை மிஞ்சிய கோர விபத்து..!! மயிரிழையில் தப்பிய உயிர்கள்..!!

பிரான்ஸில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.சில விபத்துக்கள் மிக கோரமாக இருக்கும். விபத்தின் பாரதூரதன்மையை வெளிப்படுத்தவும் அவற்றைப் பகிருவதற்கு சிரமமாக இருக்கும்.
ஆனால், இன்னும் சில வகை விபத்துக்கள் மிக மிக பயங்கரமாக தோற்றமளிக்கும். பார்ப்பவர்களை திகிலூட்டுவதற்கு பதில் ஆச்சரியப்பட வைக்கும். சினிமா படப்பிடிப்புக்கள் என எண்ண வைக்கும்.அப்படியொரு விபத்தே இது.கடந்த 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில், Valmy-Le Moulin நகரில் A4 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இது ஒரு ‘நம்பமுடியாத’ விபத்து என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.வாகனங்களை ஏற்றிச் செல்லும் வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தையடுத்து, ஏற்றிச்செல்லப்பட்ட வாகனங்கள் பல வெவ்வேறு கோணங்களில் சிக்கியுள்ளன.இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை.