யாழ் தேர்தல் களத்தில் இப்படியும் ஒரு பிரச்சார யுக்தி.!! வந்து விட்டது ‘விக்னேஸ்வரன்’ முகக்கவசம்!!

வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் உருவப்படம் பொதித்த முகக்கவசங்களை, அவரது ஆதரவாளர்கள் விநியோகித்து வருகிறார்கள்.

யாழில் இது விநியோகிக்கப்பட்டது. கட்சிக் கூட்டங்களிற்கு செல்பவர்களிற்கு முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டது.தற்போது பிரச்சார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் வித்தியாசமான பிரச்சார உத்திகளை கடைப்பிடித்து வருகின்றன.