இலங்கையில் ஊரடங்குச் சட்டம் முழுமையாக நீக்கப்பட காரணம் என்ன? ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்ட தகவல்..!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றானது சமுகத்துக்குள் பரவுவது, கடந்த இரண்டு மாதங்களாகப் பூச்சியமாக இருந்ததாலேயே ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும், மூன்று அறிவுரைகளையும் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளார். இது தொடர்பில் தன்னுடைய டுவிட்டரில் ஜனாதிபதி பதிவொன்றை இட்டுள்ளார். இதில் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பொது இடங்களில் முகக்கவசங்களை அணிய வேண்டும்.சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும்,கைகளைச் சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் பொறுப்பாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் அத்துடன் மற்றவர்களையும் பாதுகாப்பாக வைத்திருங்கள் என மூன்று அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.