ஜூலை 5ஆம் திகதிக்கு பின் அரச சேவையாளர்களின் பணி நேரத்தில் மாற்றம்..?

ஜூலை 5ஆம் திகதிக்கு பின்னர் நெகிழ்வு போக்குவரத்து திட்டமொன்றை அறிமுகம் செய்ய அரசு ஆலோசித்து வருகிறது.

அரச, தனியார் நிறுவனங்கள் தற்போது மட்டுப்படுத்தப்பட்ட சேவையை முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையில் ஜூலை 5ஆம் திகதிக்கு பின்னர் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில், பொதுப்போக்குவரத்தில் பெரும் நெருக்கடி ஏற்படும் என்பதை கவனத்தில் கொண்டு, இவ்வாறான நெகிழ்வு போக்குவரத்து திட்டத்தை அறிமுகம் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது.அத்துடன், அரச சேவையாளர்களின் பணி நேரத்திலும் மாற்றம் ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஜூலை 1ஆம் திகதி முதல் இந்த நடைமுறையை அமுலுக்கு கொண்டு வர அரசு தீர்மானித்துள்ளது.