2011 உலகக்கிண்ண இறுதிப் போட்டி…ஆட்டநிர்ணய சதி ஆதாரங்களை இன்று ஐசிசிக்கு..!!

2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றது என்பதற்கான தன்னிடமுள்ள ஆதாரங்களை இன்று மின்னஞ்சல் மூலம் ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவினரால் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
நேற்று இரவு ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவினர் தன்னிடம் தொலைபேசி வழியாக உரையாடி, தனது வாக்குமூலத்தை பதிவு செய்ததாக அறிவித்துள்ளார்.

இன்று (27) கண்டியில் நடந்த கூட்டமொன்றில் இதனை தெரிவித்தார்.2011ஆம் ஆண்டு மும்பை வன்கடே மைதானத்தில் நடந்த உலகக்கிண்ண இறுதிப் போட்டியில், இலங்கையில் பலமான வீரர்கள் இருந்தும், ஒருசில துரோகிகளின் செயற்பாடு காரணமாக இலங்கை கிண்ணத்தை வெல்ல முடியாமல் போனதாக தெரிவித்தார்.
அவர்கள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.