சின்னக் கல்லு…பெரும் லாபம்…ஒரே இரவில் கோடீஸ்வரன் ஆன ஏழைத் தொழிலாளி..!!

உள்ளங்கை அளவிலான இரு அரிய ரத்தினக்கற்களை கண்டறிந்து ஒப்படைத்த சுரங்க ஊழியருக்கு சுமார் 25 கோடி ரூபாவை அரசு கொடுத்துள்ளது. தான்சானியா நாட்டின் வடக்கு பகுதிகளில் பல்வேறு சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. எல்லை தாண்டி வைரம் உள்ளிட்ட கற்கள் திருடு போவதை தடுக்க பிரமாண்ட சுவர்கள் கட்டப்பட்டு இந்த சுரங்கங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

இந்த நிலையில், இங்குள்ள சுரங்கம் ஒன்றில் பணியாற்றும் தொழிலாளிக்கு, சுரங்கத்தை தோண்டும் பணியின் போது இரண்டு ரத்தின கற்கள் கிடைத்துள்ளன. தலா 9 மற்றும் 5 கிலோ எடையிலான நீல ரத்தின கற்கள் அரிதானது என்பதால், அரசிடம் அவர் ஒப்படைக்கவே தற்போது, அந்த தொழிலாளி கோடீஸ்வரன்.இந்திய மதிப்பில் சானினியூ லைஸெர் என்ற தொழிலாளிக்கு சுமார் 25 கோடி ரூபா அரசால் வழங்கப்பட்டுள்ளது.