பயனர்களால் அதிருப்தி அடைந்த பேஸ்புக் நிறுவனம்.!! ஏற்படப் போகும் திடீர் மாற்றம்!!

இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது முகப்புத்தகத்தில் சில நடைமுறைகளை மாற்றியமைக்கவுள்ளதாக முகப்புத்த தலைமையகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் அமெரிக்காவில் இடம்பெற்ற இனப்பிரச்சினை மற்றும் இந்திய – சீன மோதல், கொரோனா அச்சுறுத்தல் ஆகிய காலப்பகுதியில் பயனர்களின் செயற்பாட்டால் அதிருப்தி கண்டமையே இந்த மாற்றித்திற்கு காரணமென குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.அனர்த்தங்களின் போதான தேவையற்ற முரண்பாடுகளை தீர்க்கும் முகமாகவே இந்த செயற்பாடு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.இதேவேளை முகப்புத்தத்தில் வெளியாகும் பொய்யான தகவல்களை தவிர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிடப்பட்டுள்ளது.