கனடாவில் மாயமாகிய இலங்கைத் தமிழ்ப் பெண்மணி!! தீவிர தேடுதலில் பொலிஸார்..!!

கனடாவில் வாழ்ந்து வந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் ஒருவரை காணவில்லையென அந்நாட்டு பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்த தகவலை ரொரன்ரோ பொலிசார் தமது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளனர்.

47 வயதுடைய சசிகுமாரி அமரசிங்கம் எனும் பெண்ணே காணாமல் போயுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.கடந்த 25ஆம் திகதி இரவு 10.30 மணிக்கு பாராளுமன்ற வீதிப்பகுதியில் இறுதியாக இருந்த இவர் மாயமாக மறைந்துள்ளார்.குறித்த நபர் 4 அடி 5 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் காணாமற்போன அன்று நீல நிற சட்டையும், ரோஸ் நிற நீளக்காட்சட்டையும் அணிந்திருந்தார்.இவர் தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தங்களுக்கு தெரியப்படுத்துமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.