தமிழ் வளர்த்த பாரதியார் பண்பாட்டை வளர்க்க மறந்து விட்டாரா என தமிழ் ஆர்வலர்கள் தமது ஆதங்கத்தை கொட்டுகின்றனர்.யாழ்.மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் பொது இடங்களில் ஒட்டப்படும் தேர்தல் விளம்பர சுவரொட்டிகள் கிழித்தெறியப்படும் நிலையில், யாழ்.நல்லுார் ஆலய சுற்றாடலில் அருவருப்பை உண்டாக்கும் வகையில் பாரதியார் சிலை மீது ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்ற வேண்டுமென பலரும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
தேர்தல் காலத்தில் பொது இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டுவது வழமை என்றபோதும் அவ்வாறு ஒட்டப்படும் சுவரொட்டிகள் அவை மற்றவர்களை கவரும்படி இருக்கவேண்டுமே தவிர மற்றவர்களுக்கு அருவருப்பை உண்டாக்கும் வகையில் அமைய கூடாது எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
