இலங்கையில் திடீரென அதிகரித்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை!!

இலங்கையில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.குறித்த நான்கு பேரும் பாகிஸ்தானில் இருந்து வந்த நிலையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2014 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை இன்றைய தினம் மேலும் 17 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1619 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு வென்றுள்ளனர்.மேலும், 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.