இந்தியாவைப் புரட்டிப் போடும் கொரோனா!! ஒரே நாளில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்குத் தொற்று.!!

இந்தியாவில் ஒரே நாளில் 17,000 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, இன்று மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,90,401 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை புதிய கொரோனா தொற்று 17,296 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.அதேவேளை கொரோனாவால் 407 பேர் உயிரிழந்துள்ளதுடன்,மொத்த எண்ணிக்கை 15,000 ஐ கடந்துள்ளது.மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அறிக்கையின் படி, இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணின்னை வெள்ளிக்கிழமை 4,90,401 ஐ எட்டியுள்ளது.மொத்த தொற்றாளர்களில் 1,89,463 வைத்தியசலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரத்தில் 2,85,637 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் 1,47,741 ஆகவும், டெல்லி 73,780 ஆகவும், தமிழ்நாடு 70,977 ஆகவும், குஜராத் 29,520 ஆகவும், உத்தரப்பிரதேசம் 20,193 ஆகவும், ராஜஸ்தான் 16,296 ஆகவும், மேற்கு வங்கம் 15,648 ஆகவும் பதிவாகியுள்ளதாக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து ஏழாவது நாளாக 14,000 க்கும் அதிகமாக வெள்ளிக்கிழமை அதிகரித்தது.ஜூன் 20 அன்று, இந்தியாவில் 14,516 தொற்றாளர்களும், ஜூன் 21 அன்று, 15,413 தொற்றாளர்களும், ஜூன் 22 அன்று 14,821 தொற்றாளர்களும், ஜூன் 23 அன்று 14,933 தொற்றாளர்களும், ஜூன் 24 அன்று 15,968 தொற்றாளர்களும், ஜூன் 25 அன்று 14,894 தொற்றாளர்களுமாக அதிகரித்துள்ளது.எவ்வாறாயினும், மத்திய சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி, மீட்பு விகிதம் 58 சதவீதத்திற்கும் மேலாக முன்னேறியுள்ளது.இந்தியா நேற்று வியாழக்கிழமை 16,922 கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மிகப்பெரிய ஒற்றை நாள் அதிகரிப்பு பதிவு செய்தது, இது ஒட்டுமொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கையை 4.73 இலட்சமாக உயர்த்தியது. இதற்கிடையில், இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,894 ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.