ஒசாமா பின்லேடனை தியாகி எனப்புகழ்ந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் .!!

ஒசாமா பின்லேடனை தியாகி என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2001 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 11ஆம் திகதி அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் என்று கூறப்படும் கட்டடங்களை விமானங்களை மோத வைத்ததால் அதில் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஒசாமா பின்லேடன் தான் என்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்கா ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானுக்குள் நுழைந்து சுட்டுக்கொன்றதுடன், அவரது உடலை கடலில் வீசியதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இது குறித்து கருத்துக் கூறுகையில் ’பாகிஸ்தானுக்குள் நுழைந்து தியாகி ஒசாமா பின்லேடனை கொன்றது அமெரிக்கா’ என்று கூறியுள்ளார்.பயங்கரவாத எதிர்ப்புப் போரில் அமெரிக்காவுடன் இணைந்து பாகிஸ்தான் செயல்பட்டிருக்கக் கூடாது என்று பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.மேலும், அமெரிக்கப் படைகள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஒசாமாவை தாக்கிக் கொன்றபோது பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. இதுதான் பாகிஸ்தானை அனைவரும் எதிர்மறையாக விமர்சிக்கத் தொடங்கியதற்கான தொடக்கப்புள்ளி என்று இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் ஆபத்தான தீவிரவாதிகளில் ஒருவர் என்று கூறப்படும் ஒசாமா பின்லேடனை பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் தியாகி என கூறியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.