மெக்ஸிக்கோவை புரட்டிப் போடும் கொரோனா.!! இரண்டு லட்சம் பேருக்கு பாதிப்பு..! இதுவரையில் 25 ஆயிரம் பேர் பலி..!!

வட அமெரிக்க நாடான மெக்ஸிகோவில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்ததோடு, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 2 இலட்சத்து 2 ஆயிரத்து 951பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர். 25 ஆயிரத்து 60பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 6,104பேர் பாதிப்படைந்ததோடு, 736பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், 61,029பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 116,862பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 378பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.