கடலில் சிக்கித் தவித்த சுமார் 100 ரோஹிங்கியா மக்களை மீட்ட இந்தோனேசிய மீனவர்கள்!!

இந்தோனேசியா கடற்பகுதியில் சிக்கித் தவித்த சுமார் 100 ரோஹிங்கியா மக்களை, மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவந்தனர்.

துன்புறுத்தப்பட்ட மியான்மர் சிறுபான்மையினரைச் சேர்ந்த 30 குழந்தைகள் உட்பட சுமார் 94 பேரை நேற்று (வியாழக்கிழமை) மீனவர்கள் தங்கள் படகில் கரைக்கு கொண்டுவந்து சேர்த்தனர்.சுமத்ரா தீவைச் சேர்ந்த கடல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்படுவதற்கு முன்பு அவர்களை கரைக்கு கொண்டுவந்ததாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.இந்தோனேசிய மாகாணமான ஆச்சேவில் உள்ள லோக்சுமாவே அதிகாரிகள் கொரோனா வைரஸ் கவலைகளை சுட்டிக்காட்டி ரோஹிங்கியா மக்களை தரையிறக்க அனுமதிக்க மறுத்துவிட்டனர்.இதனால், கோபமடைந்த உள்ளூர்வாசிகள் தங்கள் சொந்த படகுகளில், ரோஹிங்கியா மக்களை கரைக்கு கொண்டுவந்து பொறுப்புக்களை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டனர்.உள்ளூர் கடற்கரையில் கூடியிருந்த குடியிருப்பாளர்கள் இந்த நடவடிக்கையை உற்சாகப்படுத்தியதாக கூறப்படுகின்றது.