வவுனியா – திருகோணமலை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த நபரை வைத்தியசாலையில் அனுமதிக்க தேரர் ஒருவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில் காயமடைந்த நபரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு எவரும் முன்வரவில்லை.இந்நிலையில், முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த தேரர் ஒருவர், தனது பயணத்தை நிறுத்திவிட்டு காயமடைந்தவருக்கு உதவுவதற்காக முன்வந்துள்ளார்.
