அரச பணியாளர்களுக்கு மிக முக்கிய செய்தி..! மீண்டும் அறவிட தீர்மானம்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் விதிக்கப்பட்ட வரையறை மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக அரச ஊழியர்களுக்கு தொழிலுக்கு திரும்புவதற்கு வழங்க்படப்ட நிவாரண காலத்தில் மீண்டும் திருத்தங்களை மேற்கொளவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.


இது தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அரச நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜே ஜே ரத்னசிரி தெரிவித்தார்.அத்துடன் கொரோனா வைரஸ் காரணமாக அரச பணியாளர்கள் கடமைக்கு வரும் நேரத்தில் மாற்றத்தினை கொண்டுவர குறித்த அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரச பணியாளர்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் அரச நிர்வாக அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.

அதற்கமைவாக அரச ஊழியர்களக்கு முற்பண நிதியத்தின் கீழ் வழங்கப்பட்ட கடனுதவி தொகை மற்றும் அதற்கான வட்டித்தொகை ஆகியனவற்றை அரச பணியாளர்களின் வேதனத்தில் அறவிடாமல் அரச நிர்வாக அமைச்சு இடைநிறுத்தி வைத்திருந்தது.எனினும் இந்த மாதம் முதல் அதனை மீள அறவிடவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.