முதன் முறையாக மனிதர்களிடம் இருந்து ஒரு நகரை கைப்பற்றிய குரங்குகள்..!! ஆச்சரியம் ஆனால் உண்மை..!!

தாய்லாந்தில் உள்ள லாப்-பூரி என்னும் கிராமத்தில், சுமார் 6,000 குரங்குகள் வசித்து வருகிறது. இவை தமக்கு என்று ஒரு இடத்தை தற்போது கைப்பற்றி உள்ளது தான் மிகவும் விநோதமான விடயமாக பார்கப்படுகிறது. சினிமா சதுக்கம் என்ற ஒரு இடத்தை குறித்த குரங்குகள் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளதோடு. அந்த இடத்தில் இறந்த குரங்குகளை , அடக்கம் செய்து வருகிறது.

அங்குள்ள மறைவிடங்களில் இறந்த குரங்குகளை, அது மறைத்து வைக்கிறது. மேலும் மனிதர்கள் அங்கே சென்றால் உடனே தாக்குதல் நடத்துகிறது. இதனால் குறித்த இடத்திற்கு மனிதர்கள் எவரும் தற்போது செல்வது இல்லை. இனப்பெருக்கம் என்பது இவர்களுக்கு இடையே பன் மடங்காக அதிகரித்துள்ளது.எண்ணில் அடங்காத அளவு செக்ஸ் உறவை வைத்திருக்கும் இந்த குரங்குகள், படு வேகமாக இனப்பெருக்கம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால் அருகில் உள்ள கிராமங்களுக்கும் ஆபத்து என்கிறார்கள். குரங்கின் தொல்லையால், அப்பகுதியில் உள்ள பல கடைகள் மூடப்பட்டுள்ளது. மக்களும் அருகே உள்ள இடங்களில் வீடுகளை பார்த்து, குடி பெயர்ந்து வருகிறார்கள்.