16 வயது சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்து சிறையில் கம்பியெண்ணும் 66 வயது தாத்தா..!!

16 வயது சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த விசித்திரச் சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றது. கோவை போத்தனூர், பஜனை கோவில் வீதியில் வசிப்பவர் முகமது பீர் பாட்ஷா (66). திருமணமாகி, குடும்பமாக வசித்து வருகிறார்.இவருக்கு சபல புத்தி ஏற்பட்டு, அந்த பகுதியிலுள்ள 16 வயது சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்து உள்ளார். அதில் ‘எனக்கு உன்னை பிடித்திருக்கிறது. உனக்கு ஓ.கே. வா’ என்பன உள்ளிட்ட வாசகங்களை முதியவர் எழுதி இருந்ததாக தெரிகிறது.

இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுமி, அந்த கடிதத்தை தனது தாயாரிடம் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட முதியவரின் குடும்பத்தாரிடம் அந்த சிறுமியின் வீட்டினர் தெரிவித்தனர். அத்துடன் முதியவரை கண்டித்து உள்ளனர். ஆனால் அதனை பொருட்படுத்தாத முதியவர், அந்த சிறுமியை மிரட்டியுள்ளார்.
இதனால், பயந்துபோன சிறுமி வீட்டைவிட்டு வெளியே வராமல் இருந்து உள்ளார். அத்துடன் அந்த சிறுமியின் பெற்றோர் இதுதொடர்பாக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் முகமது பீர் பாட்ஷா, அந்த சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்ததுடன், அவரை மிரட்டியது உறுதியானது.இதையடுத்து முகமது பீர் பாட்ஷா மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.பின்னர் அவரை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.