நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு..!!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2007ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 6 தொற்றாளர்களைத் தொடர்ந்தே, குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அதன்படி கொரோனா தொற்றுக்குள்ளான 394 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.அத்தோடு 1602 பேர் குறித்த வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.இலங்கையில் இதுவரையில் கொரொனா தொற்றுக்குள்ளாகி 11 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.