பேருந்து நடத்துனர்களுக்கு எதிராக கடுமையாக அமுலாகும் சட்டம்..!!

முகக் கவசம் அணியாமல் பேருந்துகளின் ஏறும் பயணிகளை பயணிக்க அனுமதி வழங்கும் நடத்துனர்களுக்கு எதிராக கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விசேடமாக தனியார் பேருந்துகளில் சில பயணிகள் முகக் கவசம் அணியாமல் பயணிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.நடத்துனர்களும் பயணிகளை சுதந்திரமாக பயணிப்பதற்கு இடமளித்துள்ளனர். சில நடத்துனர்கள் முக கவசத்தை கழுத்திலேயே அணிந்திருப்பதாக கூறப்படுகின்றது.இந்நிலையில், தனியார் பேருந்துகளின் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.முகக் கவசம் அணியாத பயணிகளும், கழுத்தில் முகக் கவசத்தை அணியும் நடத்துனருடன் பயணிப்பது கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பேருந்துகளில் நின்றுக் கொண்டு பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் பல பேருந்துகளில் பயணிகள் ஒரு மீற்றர் தூரத்தில் பயணிக்காமல் அருகிலேயே பயணிப்பதாக குறிப்பிடப்படுகின்து.