கொரோனாவின் எதிரொலி…இலங்கைக்கான பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் விஜயம் ரத்து..!!

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் அடுத்த மாதம் நடைபெறவிருந்த கிரிக்கெட் தொடர் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

கொவிட் – 19 தொற்றுநோய் காரணமாக வீரர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள முடியாமல் போனதால் சர்வதேச கிரிக்கெட் தொடரில் தங்களது வீரர்கள் பங்கேற்பதற்கான உகந்த சூழல் இன்னும் உருவாகவில்லை என ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்தது.எனவே, அடுத்த மாதம் திட்டமிடப்பட்டிருந்த பங்களாதேஷ் அணியின் கிரிக்கெட் விஜயத்தை பிற்போடுவதற்கு இரண்டு நாடுகளினதும் கிரிக்கெட் சபைகள் இணங்கியுள்ளன.அத்துடன் இரண்டு தரப்பினரதும் பரஸ்பர இணக்கப்பாட்டுடன் இத்தொடரை பின்னர் நடத்துவற்கு தீர்மானிக்கப்படும்.இலங்கையும் பங்களாதேஷும் 3 போட்டிகள் கொண்ட ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் விளையாடுவதாக இருந்தது.