என் அன்புக் குழந்தையே…

என் அன்புக் குழந்தையே…
துயரம் என்பது உன்னை துரத்துவது நீ ஒடும் வரை. ஒரு முறை நீ ஒடின இடத்தில் நின்று பார் அது உன்னை என்ன செய்கிறது என்று.அது உன்னை சீண்டி உன்னை கலங்க வைக்க பக்கத்தில் நெருங்கும். நீ ஒரு அடி பின்னால் எடுத்துவை. என்ன அப்பா பின்னே செல்ல சொல்கிறீர்கள் என்கிறாயா…

நான் சொல்வதை கூர்மையாய் கேள். பின்னே அடி எடுத்து வைக்கும் உன் மனதில் நம்பிக்கை பொறுமை விடாமுயற்சியோடும்,தன்னம்பிக்கையோடும் போராடும் தைரியமும் வேண்டும் என்று முனைப்போடு முன்னே செல்.

உன் இடத்தை பலமாக்க ஒரு அடி பின்னே வைத்து உன் புத்தியும் மனதையும் நேர்முகப்படுத்தி ஔியை அதன் முன்னே விழித்து காட்டும்.பின்பு உன்னை துரத்த நினைக்கும் எதுவாய் இருந்தாலும் நிச்சயம் தூள் தூளாய் நொறுங்கி போகும்.அழுகை என ஒன்றுக்கு பின்னால் தான் மன நிம்மதியின் உருவம் நம் மனதிற்கு உணர்ந்து தெரியமுடிகிறது,ஆனால், சந்தோஷத்திற்கு பின்னால் திருப்தி என்ற உணர்வு தோன்றுவது மிகக் கடினம்,

அதனால், தான் தோல்வியிலும் துன்பத்திலும், வெற்றி என்பது சந்தோஷத்தை விட மிக பெரியது என்று கூறுகிறேன்.அந்த பக்குவம் வந்துவிட்டால் வாழ்வில் நீ ஜெயித்துக் கொண்டே இருப்பாய். அதனால் நீ எதற்கும் கலங்காதே. எதற்கும் அஞ்சாதே,நீ ஜெயமாக எல்லா செல்வ வளங்களைப் பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவாய்.

-ஓம் ஸ்ரீ சாய்ராம்🌺 -ஓம் ஸ்ரீ சாய்ராம்🌺 -ஓம் ஸ்ரீ சாய்ராம்🌺