யாழ். வல்லையில் கட்டுப்பாட்டை இழந்து நீரேரிக்குள் பாய்ந்த பட்டா!!

யாழ் – பருத்தித்துறை வீதியின் வல்லைப் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த பட்டா ரக வாகனம் ஒன்று நீரேரிக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை பருத்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வேகமாக வந்த பட்டா ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்து குறித்து தெரிய வருகையில், கனமழை பெய்ததன் காரணமாக வல்லை பாலத்தில் ஏற்பட்ட சறுக்கல் நிலையால் கட்டுப்பாட்டை இழந்த பட்டா வீதியை விட்டு விலகி நீரேரிக்குள் பாய்ந்துள்ளது.இதன்போது வாகனத்தின் சாரதி சிறு காயங்களுக்குள்ளான நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.