இலங்கையின் மூத்த அறிவிப்பாளர் சி.நடராஜசிவம் திடீர் மறைவு..!!

இலங்கையின் மூத்த அனுபவம்மிக்க அறிவிப்பாளர், நடிகர் என்ற பல துறைகளிலும் முன்னிலை வகித்த சி.நடராஜசிவம் காலமானார்.

சுகவீனம் காரணமாக நேற்று இரவு 11.30க்கு அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் உடலம் இன்று ஜயரத்ன மலர்சாலையில் வைக்கப்பட்டு பிற்பகலில் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளன.இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்புத்துறையை ஆரம்பித்த, நடராஜசிவம் இலங்கையின் வானொலித்துறைக்கு புதிய வடிவத்தை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (25) பிற்பகல் பொரளை பொது மயானத்தில் இடம்பெறவுள்ளன.ஊடகத்துறையில் மட்டுமன்றி திரைப்படத்துறை மற்றும் நாடகத்துறை ஆகியவற்றில் அன்னார் சிறந்த கலைஞராக விளங்கினார்.