வாக்களிப்பதற்கான நேரத்தை அதிகரிப்பது குறித்து ஆராயும் தேர்தல்கள் ஆணைக்குழு.!!

பொதுத் தேர்தல் நடைபெறும் கால எல்லை தொடர்பாக ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று மீண்டும் ஒன்றுகூடவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (வியாழக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.இதன்போது, வாக்களிப்பதற்கான நேரத்தை அதிகரிப்பது குறித்தும் தேர்தல் தொடர்பான எதிர்வரும் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் ஒத்திகைகளை நடத்தி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான திட்டம் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.