கருணா தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு.!!

முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான வீடியோ காட்சிகளை பெற்றுக் கொண்டு, அது தொடர்பான விரைவான விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே குற்ற விசாரணை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பில் குற்ற விசாரணை பொலிஸார் B34859/01 என்ற இலக்கத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அம்பாறையில் இடம்பெற்ற கூட்டத்தில் இராணுவத்தினர் 3000 பேரை கொலை செய்ததாக கருணா வெளியிட்ட கருத்து தொடர்பான காணொளிகள் தொலைக்காட்சி செய்திகளில் ஒளிபரப்பானதாக குற்ற விசாரணை பொலிஸார், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.அப்படி என்றால், அந்த காட்சிகளின் முழுமையான பிரதிகளை ஊடக நிறுவனங்களிடம் பெற்றுக் கொள்வதற்கான உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு குற்ற விசாரணை பிரிவினால், நீதிமன்றத்தில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.இந்த கோரிக்கைகளை ஆராய்ந்த நீதவான், குறித்த காணொளியை குற்ற விசாரணை பிரிவிடம் ஒப்படைக்குமாறு குறித்த ஊடகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.