அதிகாலை வீட்டிலிருந்து தனியாக வெளியில் வந்த 17 வயது மாணவி…பெற்றோர் கண்ட கொடூரக் காட்சி..!

இந்தியாவில் அதிகாலையில் வீட்டுக்கு அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அஞ்சனா (17). இவர் அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அஞ்சனாவுக்கு பனிரெண்டாம் வகுப்பு கிரேட் தேர்வு நடக்கவிருந்தது.இதையடுத்து ஞாயிறு இரவு முழுவதும் அவர் படித்து கொண்டிருந்தார்.

பின்னர் திங்கள் அதிகாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து வெளியில் சென்ற அஞ்சனா வெகுநேரமாக வீடு திரும்பவில்லை.இதையடுத்து அஞ்சனாவின் தாயார் மற்றும் சகோதரி இருவரும் அவரை தேடிய போது அருகில் இருந்த கிணற்றுக்குள் அஞ்சனா மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கத்தினார்கள்.சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து அஞ்சனாவை வெளியில் எடுத்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.தேர்வுப் பயத்தில் அஞ்சனா தற்கொலை செய்து கொண்டார் என பொலிசார் கூறியுள்ளனர்.அஞ்சனாவின் குடும்பத்தார் கூறுகையில், கடந்த 5 நாட்களாகவே அஞ்சனா யாரிடமும் பேசாமல் இருந்தாள். நாங்கள் அவளுக்கு என்ன பிரச்சனை என கேட்டும் கூறவில்லை.தேர்வு காரணமாக மிகுந்த பயம் மற்றும் மன அழுத்தத்தில் அஞ்சனா இருந்திருக்கிறாள்.அவளின் மரணம் எங்களுக்கு அதிர்ச்சி தருகிறது. அஞ்சனாவின் தந்தை துபாயில் பணிபுரிகிறார் என கூறியுள்ளனர்.சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.