ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கு கொரோனா..!! பெரும் அதிர்ச்சியில் மருத்துவ உலகம்..!

மெக்சிகோவில் 1 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று இருக்கிறது, 22 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். இன் நிலையில் அங்கு ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்தன. ‘ட்ரிபுள் டமாக்கா’ என்று அந்தக் குழந்தைகளின் தாயும், தந்தையும் உற்சாகத்தில் மிதக்க, அந்த உற்சாகம் சில மணித்துளிகளில் பறிபோய் விட்டது.அந்த 3 குழந்தைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை உலகில் எங்கும் இப்படி நடந்ததாக தகவல் இல்லை என்று மெக்சிகோ சுகாதார அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள். பொதுவாகவே புதிதாக பிறந்த குழந்தைக்கு அதே நாளில் கொரோனா வைரஸ் தொற்றுவது இல்லை. இது கேள்விப்படாத ஒன்றாகவே இருக்கிறது.ஒருவேளை கொரோனா தொற்று உடையவர்கள் அந்த குழந்தையை பார்க்க வந்து, தூக்கி வைத்து கொஞ்சி இருந்தால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. ஆனால் அப்படியும் நடக்கவில்லை என்று கூறியுள்ளார்கள். தாய் மற்றும் தந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.