யாழில் இன்று தங்க விற்பனை நிலவரம்…

யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 24) புதன்கிழமை மூன்றாவது நாளாக  தளம்பலின்றித் தொடர்கிறது.சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது.சர்வதேச அளவில் கோரோனா தொற்று நோய் பரவலால் தற்போது உள்ள நிலையற்றதன்மை, இந்தியா சீனா இடையேயான பதற்றமாக சூழல் போன்றவை காரணமாக, பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டொலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளும் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளதால், தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் இன்று (ஜூன் 24) ஒரு பவுண் ஆபரணத் தங்கம் (22 கரட்) 84 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.24 கரட் தூய தங்கத்தின் விலை பவுணுக்கு 92 ஆயிரத்து 500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.