கணவனுக்கு தேனீரில் இனிப்புக் குறைவாக கொடுத்த மனைவிக்கு நேர்ந்த கொடூரம்.!! கத்தியால் வெட்டிப் படுகொலை..!!

வட இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் பார்பர் பகுதியை சேர்ந்தவர் பப்லு குமார். இவருக்கு ரேணு என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், வழக்கம்போல் ரேணு பப்லு குமாருக்கு காலையில் தேநீர் போட்டுக் கொடுத்துள்ளார். தேநீரில் இனிப்பு அளவு குறைவாக இருந்ததாக தெரிகிறது. இதனால் பப்லு குமாருக்கும், அவரது மனைவி ரேணுவிற்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் சண்டை முற்றவே ஆத்திரமடைந்த பப்லு குமார் கிச்சனில் இருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.தாயின் அலறல் சத்தத்தை கேட்டு அவரின் மூன்று குழந்தைகளும் கிச்சனில் வந்து பார்த்தபோது, அவரது அம்மா ரேணு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் அளிக்க சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் ரேணுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் தலைமறைவான பப்லு குமாரை தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.